ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வைபவ், ரம்யா நம்பீசன் நடிக்கும் டமால் டுமீல் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. தமன் இசை அமைத்துள்ளார், ஏ.எம்.எட்வின், சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீ இயக்கி உள்ளார். தனது படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீ கூறியதாவது: சின்ன சின்ன லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கிற இன்றைய சராசரி இளைஞன்தான் கதையின் நாயகன். ஒரு சிறிய பிரச்னையில் மாட்டி வேலையை இழக்கிறான். எப்படியாவது குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து ஒரு காரியத்தை செய்யப்போய் அது பெரிய பிரச்னையாகிவிடுகிறது.
நகரில் உள்ள சாயாஜி ஷிண்டே, கோட்டா சீனிவாசராவ் என்ற இரு கொடூரமான தாதாக்களின் மோதலுக்குள் சிக்கிக் கொள்கிறார். யாராவது ஒருவர் கையில் மாட்டினாலும் ஆள் குளோஸ். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் எப்படி தப்பிக்கிறார். என்ன பிரச்னையில் சிக்கினார் என்பதுதான் படத்தோட திரைக்கதை. ஆக்ஷன் த்ரில்லரில் காமெடிய கலந்து எடுத்துருக்கோம். இரண்டு மணிநேர எண்டர்டெயின்மெண்டுக்கு கியாரண்டி என்கிறார் இயக்குனர் ஸ்ரீ.