'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஏ.ஆர்முருகதாஸ் இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடிப்பில் கடந்த வெள்ளி அன்று வெளியான படம் - "மான் கராத்தே. தமிழகம் முழுக்க 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மான் கராத்தே படம் யு சான்றிதல் பெற்றிருந்ததால் அப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்தது தமிழக அரசு .
"மான் கராத்தே படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயசீலன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். "மான் கராத்தே படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை கிடையாது. இதில் வரும் கராத்தே என்ற சொல் ஜப்பானிய வார்த்தை. கேளிக்கை வரி விலக்குக்கு தமிழில் பெயர் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி. விடுமுறை நாள்களிலும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க வேண்டும் என ஹீரோ பாடும் பாடல் ஆங்கிலத்தில் உள்ளது. இந்தப் பாடல் பொது ஒழுக்கத்துக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் எதிராக உள்ளது. எனவே, இந்தப் படத்துக்கு வரி விலக்கு வழங்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று ஜெயசீலன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் புதன்கிழமை (09.04.2014) அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வணிகவரித்துறை செயலாளர், ஆணையர், படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.