அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன் குறித்து சமீப காலமாக அதிக அளவில் பரபரப்பான செய்திகளும், அவருக்கு அரசியல் பின்னணி இருப்பதால் வரும் தேர்தலில் பா.ஜ.,விற்கு ஆதரவு அளிக்க போவதாக வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவற்றை அமிதாப் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, அமிதாப் சந்தித்து பேசினார்.இதனால் அவர் பா.ஜ.,விற்கு தான் தனது ஆதரவை அளிக்கப் போவது உறுதியாகி உள்ளது என கிசுகிசுக்கப்பட்டது.
அமிதாப் பற்றிய வதந்திகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக பா.ஜ.,விற்கு ஆதரவு அளிப்பது உண்மையா? என அமிதாப்பிடமே நேரடியாக கேட்கப்பட்டது. அதற்கு, மோடி மட்டுமல்ல நான் எந்த அரசியல்வாதியை சந்தித்து பேசினாலும், அது அவரை நான் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடாது. அவர்களது கொள்கைகளையும் நான் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடாது என நெத்தியடி பதிலத்தார்.