இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சின்னத்திரையில் நீண்ட காலமாக தொகுப்பாளராக இருந்து வருகிறவர் ஈரோடு மகேஷ். அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். சட்டம் ஒரு இருட்டரை, சும்மா நச்சுன்னு இருக்கு படங்களில் மெயின் காமெடியனாக நடித்தார். தற்போது சிகரம் தொடு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரையை விடாமல் இருக்கிறார். நடுவுல கொஞ்சம் டிஸ்ட்டர்ப் பண்ணுவோம், ஒல்லி பெல்லி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதற்கு இடையில் முனைவர் பட்டத்துக்கான பிஎச்டி படிப்பிலும் தீவிரமாக இருக்கிறார்.
இதுபற்றி மகேஷ் கூறியதாவது: சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் பெரிய திரைதான் சின்னத்திரை கலைஞர்களின் கனவு. அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறேன். சரியான பிரேக் கிடைக்கவில்லை. சிகரம் தொடு படத்தில் அது கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழ்துறையில் பிஎச்டி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். எனது வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களுக்காகவாவது அதனை சீக்கிரம் முடித்து முனைவர் பட்டம் வாங்கிவிடுவேன் என்கிறார் மகேஷ்.