பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர், நடிகைகள் மானேஜர் வைத்திருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகர், நடிகைகளுக்கு கால்ஷீட் பார்ப்பவரையே தனக்கும் மானேஜராக வைத்திருக்கும் இசையமைப்பாளர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடிகர் தனுஷ், அமலாபால், காஜல் அகர்வால், தமன்னா உட்பட பல நட்சத்திரங்களுக்கு கால்ஷீட் பார்ப்பவரை தனக்கு மானேஜராக நியமித்திருக்கிறார் கொலவெறி இசையமைப்பாளர் அனிருத்.
இவருக்கு என்னத்துக்கு மானேஜர்? எல்லாம் காரணமாகத்தான் மக்களே..! என்ன காரணம்?
தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்து வரும் அனிருத், தன் சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்திவிட்டார். அதேசமயம், பெரிய இயக்குநர்கள், பெரிய நிறுவனங்கள் தன்னை அணுகும்போது அவர்களிடம் பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கும்போது சங்கடமாக ஃபீல் பண்ணினாராம் அனிருத். அதனால் பெரிய தொகையை கேட்க நினைத்தாலும் அவரால் வாய்விட்டு கேட்க முடியாதநிலை. எனவே இது பற்றி அவரது உறவினரான நடிகர் தனுஷிடம் அட்வைஸ் கேட்டிருக்கிறார் அனிருத். தனுஷ்தான் தன்னுடைய மானேஜரையே அனிருத்துக்கும் மானேஜராக பணியாற்றும்படி சொன்னாராம்.
மானேஜர் நியமித்த பிறகு அனிருத் ஹாயாக இருக்கிறார். யார் அவரை அப்ரோச் பண்ணினாலும் மானேஜரிடம் பேசும்படி சொல்லிவிடுகிறார். மானேஜரோ அனிருத் ஆசைப்பட்டபடி கோடிக்கணக்கில் பில்லைப்போட்டு வருகிறார்.
பொழக்கத் தெரிஞ்ச பசங்களப்பா!