தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னடத்தில் சுதீப் நடித்த விஷ்ணுவர்த்தனா என்ற படம் தமிழில் ஹலோ பாஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தில் சுதீப் ஜோடியாக பாவனா மற்றும் பிரியாமணி நடித்துள்ளனர். ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பற்றி சாருலதா என்ற படத்தை இயக்கிய பொன்குமரனின் முதல் படம் இது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை விஜய் நடிக்க தமிழில் ரீமேக் செய்வதாக இருந்தது. அது சரியாக அமையாததால் இப்போது டப் செய்து வெளியிடுகிறார்கள்.
அப்பாவி இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு தாதாவை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதை அவன் எப்படி சமாளிக்கிறான் என்கிற கதை. பாவனா நல்ல கேரக்டர் ரோலிலும், ப்ரியாமணி கவர்ச்சியாகவும் நடித்துள்ளனர். சுதீப், பாவனா, பிரியாமணி மூவரும் தமிழுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் படத்தை துணிந்து டப் செய்து வெளியிடுகிறார்கள்.