ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
கோச்சடையான் படம் எப்போது ரிலீசாகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கோச்சடையானின் அனிமேஷன் கேம்ஸ்சுகள் இணைய தளங்களில் ஹிட்டடித்து வருகிறது. சர்வதேச தரத்தில் கோச்சடையான் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேம்கள் சர்வதேச அனிமேஷன் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இரண்டு விதமாக கேம்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
கோச்சடையான் கிங்தம் ரன்
இந்த கேம்ஸ்சின் கதை கோச்டையான் தனது கோட்டையை தாக்க வரும் எதிரிகளை தனி ஆளாக சந்தித்து கோட்டையை மீட்கிற கதை. கோச்சடையான் கையில் வில், அம்பு, கத்தி, வாள், கோடாறி போன்ற ஆயுதங்கள் இருக்கும். அதை சைட் ஸ்க்ராலர் வகை கேம்களில் பயன்படுத்துவது போல பயன்படுத்திக் கொள்ளலாம். விளையாட்டில் கோச்சடையான் கொல்லப்பட்டுவிட்டால் அவர் உடலில் இருந்து ஒரு தீபம் புறப்பட்டு இன்னொரு கோச்சடையான் உடலுக்குள் புகுந்து சண்டையை தொடரும், அதாவது மறு லைஃபை இப்படி வித்தியாசமாக செய்திருக்கிறார்கள். இந்த கேம் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் 5க்கு 4.4 மதிப்பெண்களை பெற்றிருக்கிறது. இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மேல் விளையாடி இருக்கிறார்கள்.
கோச்சடையான் ரீஜின் ஆப் ஆரோஸ்
இது ஷூட்டிங் கேம் வகையை சேர்ந்தது. துப்பாக்கிக்கு பதில் கையில் அம்பு இருக்கும். அது விதவிதமாக எதிரிகளை தாக்கும். ஒரே அம்பு நான்கைந்தாக பிரிந்துகூட தாக்கும். எதிரிகளை மறைந்திருந்தும் தாக்குவார் கோச்சடையான். இது ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் 5க்கு 4.1 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இதுவரை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.