'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மெரீனா தொடங்கி மான் கராத்தே வரை வெற்றி தொடர்கிறது. மெரீனா, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும், இந்தப் படங்கள் அனைத்தையும்விட சிவகார்த்திகேயனுக்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது - வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான். இந்தப்படம் சுமார் 25 கோடி வசூலித்தது. தயாரிப்பாளருக்கு மட்டுமே 8 கோடி நிகர லாபத்தைக் கொடுத்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் மான் கராத்தே. இந்தப் படத்துக்கு விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகரான ஓப்பனிங் இருந்தது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மான் கராத்தே படத்தைப் பற்றி படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சில ரசிகர்கள் அபிப்ராயப்பட்டாலும், பெரும்பாலான மக்களின் மவுத்டாக் பாசிட்டிவ்வாக இருக்கிறது. திரையரங்குகளில் கூட்டம் இன்னமும் குறையவில்லை.
வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில், தமிழ்நாட்டில் மட்டும் மான் கராத்தே படம் 12 கோடி வசூலித்திருக்கிறது என்கிறது விநியோகஸ்தர்கள் தரப்பு. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசூலைவிட இந்தத் தொகை பல மடங்கு அதிகமாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் மான் கராத்தே, அண்டை மாநிலமான பெங்களூருவில் 40 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. அங்கும் செம ரெஸ்பான்ஸ். அசுர வேகத்தில் வளர்ந்துவிட்ட சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மட்டுமல்ல, அவரது படங்களின் வசூலும் முன்னணி ஹீரோக்களை அதிர்ச்சியடை வைத்திருக்கிறதாம்.