ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அ.தி.மு.க.வின் கோபத்துக்கு ஆளானதால் திரைப்படத்துறையினரால் கைவிடப்பட்டார் வடிவேலு. தற்போது அவர் நடித்த தெனாலிராமன் படத்துக்கு தெலுங்கு அமைப்புகள் வடிவேலுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 5 ஆம் தேதி சனிக்கிழமை வடிவேலுவின் வீட்டை முற்றுகையிடப்போவதாக புறப்பட்டு வந்த ஒரு தெலுங்கு அமைப்பைச் சேர்ந்த சிலரை, வழியிலேயே கைது செய்தது காவல்துறை. தெலுங்கு அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, சாலிகிராமத்தில் பத்மாவதி நகரில் உள்ள வடிவேலுவின் புதுவீடு, வேதவள்ளி தெருவில் இருக்கும் அவரது அலுவலகம், மற்றும் அவர் ஏற்கனவே குடியிருந்த லோகையா காலனியில் உள்ள பழைய வீடு ஆகி மூன்று இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தெலுங்கு அமைப்பினர் கைது செய்யப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே வடிவேலுவின் இருப்பிடங்களில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
அதனால் அதிர்ச்சியடைந்தார் வடிவேலு. இவ்விஷயத்தை அறிந்து தன் ஆட்களை வடிவேலுவுக்கு பாதுகாப்பு கொடுக்க அனுப்பி வைத்தார் சீமான். அதுமட்டுமல்ல, வடிவேலுவை எதிர்க்கும் தெலுங்கு அமைப்புகளை எச்சரிக்கும் வகையில் காரசாரமான அறிக்கை ஒன்றையும் இன்று வெளியிட்டிருக்கிறார் சீமான்.
கட்சி தொடங்குவதற்கு முன் சில படங்களை இயக்கியபோது சீமானும், வடிவேலுவும் பங்காளி பங்காளி என்று பாசத்தைப் பொழிந்து கொள்வார்கள். அந்த பாசத்தின் காரணமாகவே தற்போது வடிவேலுவுக்கு ஆதரவாக சீமான் களமிறங்கி இருக்கிறார். அதேசமயம், இக்கட்டான நேரத்தில் வடிவேலுவுக்கு கைகொடுத்ததன் பின்னணியில் சீமானுக்கு ஒரு திட்டமும் இருக்கிறது என்கிறார்கள் திரைத்துறையினர்.
என்ன திட்டம்? வடிவேலுவை எப்படியாவது நாம் தமிழர் கட்சியில் இணைத்துவிட வேண்டும் என்பதே சீமானின் திட்டமாம். அதை மனதில் கொண்டே வடிவேலுவுக்கு ஆதரவு என்ற வலையை விரித்திருக்கிறாராம் சீமான்.