‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சின்னத்திரை சேனல்களில் பிசியாக நடித்துக் கொண்டும், நிகழ்ச்சிகளை தொகுத்துக் கொண்டும் இருப்பவர் ஜெனிப்ரியா. தற்போது வாலு, அதிமேதாவிகள், காலை 9 மணிமுதல் மாலை 4.30 மணிவரை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஜெனிக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் சின்னத்திரைக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: சின்னத்திரைதான் எனக்கு முகவரி கொடுத்தது. அதனால் என்றைக்குமே சின்னத்திரைதான் என்னோட முதல் சாய்ஸ். அடுத்துதான் சினிமா. சேனல்களில் நல்ல வாய்ப்பு வரும்போது சினிமா இயக்குனரிடம் சொல்லிவிட்டு ஓடி வந்து விடுகிறேன். டி.வி.நிகழ்ச்சியில் பங்கேற்பது அலாதியாக சுகம் கொண்டது. மக்கள் தியேட்டருக்கு வந்தால்தான் நம் திறமையை பார்க்க முடியும். ஆனால் டி.வி மூலம் நாம் அவர்கள் வீட்டுக்குள்ளேயே செல்ல முடியும். அதனால் எப்போதும் டி.வி பர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட். என்கிறார் ஜெனி.