வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஷால் தயாரித்து, நடிக்கும் படம் நான் சிகப்பு மனிதன். திரு இயக்கி உள்ளார். லட்சுமிமேனன் ஹீரோயின். இந்தப் படத்தில் விஷாலும், லட்சுமிமேனனும் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளனர். இந்த காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படம் தணிக்கை குழுவிற்கு சென்றது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் நேரடியான முத்தக்காட்சி இருப்பதால் யூ சான்றிதழ் தரமுடியாது யு/ஏதான் தர முடியும் என்று கூறிவிட்டனர். இதை எதிர்த்து விஷால் மறு ஆய்வு தணிக்கைக்கு விண்ணப்பித்தார். மறு ஆய்வு குழுவினரும் படத்தை பார்த்து விட்டு தணிக்கை குழுவின் முடிவு சரிதான் முத்தக்காட்சியை நீக்கிவிட்டு யு சான்றிதழ் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். இதை விஷால் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதால் படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி விட்டது.
யு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே வரிவிலக்கிற்கு விண்ணப்பிக்க முடியும். முத்தக் காட்சியை நீக்கிவிட்டு யு சான்றிதழ் வாங்கியிருந்தால் படத்திற்கு கண்டிப்பாக வரிவிலக்கு கிடைத்திருக்கும். ஆனால் விஷாலுக்கு முத்தக் காட்சியை நீக்க மனம் இல்லை. அதுபற்றி பரவலாக பேச்சு வந்துவிட்டது. இப்போது நீக்கினால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக போய்விடும் என்று அவர் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் விளக்கம் அளித்துள்ளார். ஒரே ஒரு முத்தக் காட்சிக்காக 30 சதவிகிதம் வரி கட்டப்போகிறார்கள்.