தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த ஜெனிபரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் பிறகு சில படங்களில் தங்கை கேரக்டரில் நடித்தார். ஆனால் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்னத்திரைக்கு வந்தார். தற்போது தாயுமானவன் தொடரில் நடித்து வருகிறார். ஜோடி நம்பர் 1 சீசன் 7 உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது கற்கண்டு என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடிக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளராக வேண்டும் என்பது ஜெனிபரின் அடுத்த கனவு. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
ஹீரோயினாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. நான் ரொம்ப சின்ன பிள்ளையாக தெரிந்ததால் அந்த வாய்ப்புகள் கைநழுவிப் போனது. இப்போது கற்கண்டு அந்த வாய்ப்பை தந்துள்ளது. சிறந்த மொழிபெயர்ப்பாளராக வேண்டும் என்பது இன்னொரு கனவு. இதற்காக ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளை கற்று வருகிறேன். இரண்டு மொழிக்கும், தமிழ் மொழிக்கும் மொழிபெயர்ப்பு பாலமாக இருக்க விரும்புகிறேன் என்கிறார் ஜெனிபர்.