விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
சுக்ரன் என்ற படத்தில இசையமைப்பாளரானவர் விஜய் ஆண்டனி.அதையடுத்து காதலில் விழுந்தேன் படத்தில் இடம் பெற்ற நாக்குமுக்க பாடல் அவரை பிரபலப்படுத்தியது. பின்னர் விஜய்யின் வேட்டைக்காரன் அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்ததால், கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளராக பட்டியலில் இடம் பிடித்தார்.
ஆனால், அப்போது பார்த்து அவருக்குள் இருந்த நடிகன் வெளியே எட்டிப்பார்த்ததின் விளைவு, இசையமைப்பதில் நாட்டமின்றி நான் என்ற படம் மூலம் நடிகராக களமிறங்கினார். பெரிய வெற்றி இல்லை. என்றாலும், ஓரளவு பேசப்பட்டது. அதனால், அடுத்தபடியாக தன்னை வைத்து படமெடுக்க படாதிபதிகள் முன்வராதபோதும் மீண்டும் தானே தயாரிப்பாளராக சலீம், திருடன் போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அந்த படங்களே இன்னும் முடியாத நிலையில், இப்போது இந்தியா பாகிஸ்தான் என்றொரு படத்திலும் நடிக்க தயாராகியிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்தில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் முக்கிய இடம் பெறுகிறதாம். இதில் ஒரு பிரலபல இந்திய கிரிக்கெட் வீரராக விஜய் ஆண்டனி நடிக்கிறாராம்.