மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் காமெடியாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் கணேசும், ஆர்த்தியும். கழக சேனல்களில் காமெடி செய்து புகழ் பெற்றவர்கள். அதன் மூலம் இப்போதும் சின்னத்திரை, பெரியதிரை, மேடை நிகழ்ச்சிகள் என பிசியாக இருக்கிறார்கள். இவர்கள் திருமண வரவேற்பில் தி.மு.க., கழக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் நேரில் சென்றெல்லாம் வாழ்த்தினார்கள். இப்போது தேர்தலையொட்டி அரசியலில் குதித்து மக்கள் சேவை செய்ய புறப்பட்டு விட்டார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்த்தி அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். அம்மா புகழ் பரப்ப போவதாகவும், அரசியலில் சேர்ந்து மக்கள் தொண்டாட்ட போவதாகவும் என் கணவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 4) ஆர்த்தியின் கணவர் கணேஷ் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்டார். "நாட்டை காப்பாற்ற நரேந்திர மோடியால் மட்டும்தான் முடியும். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மோடி பிரதமராக உதவி செய்யப்போகிறேன். நான் பா.ஜ.கவில் சேர்ந்தற்கும், என் மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறியுள்ளார். காமெடி தம்பதிகளில் அரசியல் பிசினசை பார்த்து திரையுலகமே ஆச்சர்யத்தில் மூழ்கி இருக்கிறது.