ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜீத் நடித்த காதல் மன்னன் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் சரண். கே.பாலசந்தரின் உதவியாளரான இவர், அதையடுத்து, அஜீத்தை வைத்து அமர்க்களம் என்ற படத்தை இயக்கியபோதுதான், அதில் ஜோடி சேர்ந்த அஜீத்-ஷாலினிக்கிடையே காதல் மலர்ந்து பின்னர் கல்யாணமும் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகளாயினர்.
பின்னர், அட்டகாசம், மோதி விளையாடு, ஜெமினி, ஜே ஜே, வசூல் ராஜா எம்பிபிஎஸ், அசல் உள்பட பல படங்களை இயக்கிய அவர், 4 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது ஆயிரத்தில் இருவர் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார். இந்த படத்தில் அவரது மோதி விளையாடு படத்தில் நடித்த வினய் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம்.
இப்படத்துக்காக மும்பை நடிகை ஒருவரை கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யும் சரண், தனக்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால், இப்படத்தில் தானே தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.