ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக்ராஜா வழங்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் ராஜாவின் சங்கீதத்திருநாள் இசை நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 வரை நடைபெற உள்ளது. பாடகர்கள் ஹரிஹரன், சித்ரா, மனோ, ஹரிச்சரண், விஜய் பிரகாஷ், சாதனா சர்க்கம், ஷாலினி, அனிதா மற்றும் இளையராஜாவின் இசைக்குழுவில் 38ஆண்டுகளாக இடம்பெற்ற இசைக்கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியை பிரமாண்டமாக வழங்க துல்லியமானஆடியோ சிஸ்டங்கள், மெகா திரைகள், இசையோடு நடனமாடும் விளக்குகள் என தமுக்கம் மைதானம் இசைக்கோலம் பூண்டுள்ளது. இளையராஜாவின் பேன்ஸ் கிளப் தொடக்க விழாவும் நடக்கவிருப்பதால், வெளிநாடுகளிலிருந்து அவரது ரசிகர்கள் வருகை தருகின்றனர்.
கார்த்திக்ராஜா உடன் இணைந்து ஸ்பிலண்டர் ஐ ஸ்மார்ட் இந்நிகழ்ச்சியை வழங்குகிறது. ஜி ஒன் மொபைல், டியூலக்ஸ் வெதர்ஷில்ட் மேக்ஸ், அருண் ஐஸ்கிரீம், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய பல்கலை ஆகியோர் அசோசியட் ஸ்பான்சர்கள். பிரஸ் பார்ட்னர் தினமலர் நாளிதழ், ரேடியோ பார்ட்னர் ஹலோ எப்.எம்., மீடியா பார்ட்னர் ராஜ் டிவி. ஆன்லைன் பார்ட்னர் ராகா.
டிக்கெட் கிடைக்கும் இடங்கள்: மதுரை சொக்கிகுளம் விஷால்டி மால், தமுக்கம் மைதானம், கீஷ்டுகானம் ஆடியோ கிளைகள், பெரியார் பஸ் ஸ்டாண்ட் நியூ லக்கி டிராவல்ஸ், தல்லாகுளம் ஹலோ எப்.எம்., தி மொபைல் ஸ்டோர் கிளைகள், காமராஜர்சாலை நிப்பான் பர்னிச்சர்ஸ் சென்று நேரடியாக கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இண்டியன் ஸ்டேஜ் டாட் இன் மற்றும் புக் மை ஷோ இணையதளங்களிலும் ஆன் லைன் மூலம் டிக்கெட் புக் செய்யலாம். டிக்கெட்களுக்கு +91 92437 77970ல் தொடர்பு கொள்ளலாம்.
சிறப்பு யாகம்: இளையராஜா பிறந்த ஊரான பண்ணைப்புரம் மக்கள் சார்பில் கேரளா பாரத்தோடில் உள்ள சிவன், பார்வதி கோயிலில், இளையராஜாவுக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பிரசாதம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.