பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பெரும்பாலும் ஒரு படத்திற்கு ஒரு வில்லன்தான் இருப்பார். ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி போன்ற டைரக்டர்களின் படங்களில் இரண்டு வில்லன்கள் இருப்பார்கள். ஆனால், மகிழ்திருமேனி இயக்கத்தில் இப்போது ஆர்யா நடித்துக்கொண்டிருக்கும் மீகாமன் படத்தில் மொத்தம் 7 வில்லன்கள் இருக்கிறார்களாம்.அவர்கள் அத்தனை பேருடனும் சண்டை காட்சிகளில் நடிக்கிறாராம் ஆர்யா.
ஆர்யாவுடன் மோதப்போகும் அந்த வில்லன்கள் யார் யார்? என்று கேட்டால், ஆஷிஷ் வித்யார்ஜி, சிறுத்தை அவினாஷ், பாண்டியநாடு ஹரிஷ், தடையறத்தாக்க மஹா காந்தி மற்றும் சுதன்ஷி பாண்டே, அஷிதோஷ் ராணா, பிதாமகன் மகாதேவன் என ஒரு பெரிய பட்டியலே போடுகிறார்கள்.
இவர்கள் அனைவருமே மெகா வில்லன்கள் என்பதால், அனைவருக்குமே கதையில் முக்கியத்துவம் உள்ளதாம். அதனால் படம் முழுக்க இவர்களுடன் வரிந்து கட்டி மல்லுக்கட்டியிருக்கிறாராம் ஆர்யா. ஆக இதுவரை காதல், காமெடி என்று கலந்து கட்டி வந்த ஆர்யா, இப்படம் மூலம் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் ஆவேச நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.