Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதாசிரியர்களின் பெயரை இருட்டடிப்பு செய்த சந்தானம்!

04 ஏப், 2014 - 14:57 IST
எழுத்தின் அளவு:

சிரிப்பு நடிகரான சந்தானம் கடந்த வருடம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த தற்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப்படத்தை ஸ்ரீநாத் இயக்கி வருகிறார். விஜய் நடித்த நாளைய தீர்ப்பு தொடங்கி இங்க என்ன சொல்லுது வரை பல படங்களில் சிரிப்பு நடிகராக நடித்தவர் இவர். தவிர, மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மனைவி அனீஸ் தயாரித்த முத்திரை என்ற படு தோல்விப் படத்தையும் இயக்கியவர்.


முத்திரை படம் தோல்வியடைந்ததினால் டைரக்ஷனை மறந்திருந்த ஸ்ரீநாத்தை அழைத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தவர் சந்தானம்தான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவுற்றநிலையில், விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. இந்தநிலையில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. 2010 ஆம் ஆண்டில் சுனில் நடிக்க எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி, சூப்பர்டூப்பர் வெற்றியடைந்த படம் மரியாதை ராமண்ணா. இந்தப் படத்தின் ரீமேக்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம்.


மரியாதை ராமண்ணா படத்தின் கதையை எஸ்.எஸ். ராஜமௌலி உடன் இணைந்து எழுதியவர் அவரது சகோதரரான எஸ்.எஸ்.காஞ்சி. மரியாதை ராமண்ணா படத்தின் டைட்டிலிலும், பட விளம்பரங்களில் கதை என எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ்.காஞ்சி இருவரது பெயர்களும் இடம்பெற்றன. அப்படத்தின் ரீமேக்காக தயாராகிவரும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் விளம்பரங்களிலோ எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ்.காஞ்சி இருவரது பெயர்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயம் எஸ்.எஸ். ராஜமௌலியின் கவனத்துக்குப் போனதும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தைத் தயாரிக்கும் பிவிபி நிறுவனத்திடம் தன் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in