Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெனாலிராமன் படத்தை தடை செய்ய தலைமை செயலாளரிடம் மனு

04 ஏப், 2014 - 14:28 IST
எழுத்தின் அளவு:

வடிவேலு, மீனாட்சி தீக்ஷித் நடித்துள்ள படம் கஜபுஜபல தெனாலிராமன். கல்பாத்தி சகோதரர்கள் தயாரித்திருக்கிறார்கள். யுவராஜ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் வடிவேலு மன்னர் கிருஷ்ணதேவராயகராகவும், தெனாலிராமனாவும் நடித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி தலைமை செயலாளரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது: தெனாலிராமன் என்ற படத்தில் 16ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் என்ற மன்னன் வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார். கிருஷ்ண தேவராயர் சிறந்த அரசாட்சியை வழங்கியவர், நீதி தவறாதவர், திராவிட மொழிகளை போற்றி வளர்த்தவர் அவரை காமெடியாக காட்டுவது அவரை அவமதிப்பதாகும். கிருஷ்ணதேவராயருக்கு 38 மனைவிகளும், 58 குழந்தைகளும் இருப்பது போன்று காட்டியிருக்கிறார்கள். வரலாற்று குறிப்புபடி அதில் உண்மை இல்லை.


கிருஷ்ணதேவராயரின் வரலாற்று படம் அல்ல என்று படத் தரப்பு மறுத்தாலும் படத்தின் கதையும் காட்சிகளும் அவரைத்தான் குறிப்பிடுகிறது. எனவே படத்தை வெளியிடும் முன் வரலாற்று ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், தெலுங்கு அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு போட்டுக் காட்டவேண்டும். அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும். முழு படமும் கிருஷ்ணதேவராயரை அவமதிக்கும் விதத்தில் இருந்தால் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in