'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ராணா படத்தின் பூஜை அன்று திடீரென்று உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, அதையடுத்து, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். அவர் போரூரில் உள்ள ராமச்சந்திராவில் சிகிச்சை பெற்று அதையடுத்து சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சென்றபோது, அவரது ரசிகர்கள் பல கோயில்களில் ரஜினிக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். சில ரசிகர்கள் அவருக்காக முதுகிலும், முகத்திலும் அலகு குத்திக்கொண்டு தேர் இழுத்ததோடு, பலர் மண் சோறு சாப்பிட்டனர். இன்னும் பலர் திருப்பதி கோயிலுக்கு சென்றும் மொட்டை அடித்து, ரஜினி பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டிக்கொண்டனர்.
இந்த நிலையில், தற்போது ரஜினி நடித்துள்ள கோச்சடையான் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருப்பதால், அப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 200 பேர் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று வந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தமிழகத்தின் சில ஊர்களில் உள்ள கோயில்களில் கிடாவெட்டி சிலர் விசேச பூஜைகளும் நடத்தி வருகின்றனர்.