பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கவுரவம் படத்தின் மூலம், தமிழுக்கு வந்த பாலிவுட் வரவு யாமி கவுதமுக்கு, அந்த படம், பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனாலும், தன் பளீர் சிரிப்பால், இளசுகளை கவர்ந்தார். அந்த சிரிப்பில், நடன சூறாவளி பிரபுதேவாவும் காலியாகி விட, இந்தியில், தான் இயக்கி வரும், ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் ஹீரோயின் வாய்ப்பை, அவருக்கு கொடுத்து விட்டார். இதனால், யாமி, சமூக வலை தளங்களில் பிரபலமாகியுள்ளார். பல ரசிகர்கள், அவரின் அழகை வர்ணித்து, பாலின் நிறம் கூட யாமியின் நிறத்திற்கு முன்னால் தோற்றுப் போகும்; யாமியின் பளீர் சிரிப்பு பரவசத்தை தருகிறது என்று ஆளாளுக்கு எழுதி தள்ளுகின்றனராம்.