Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை! சமந்தாவின் அவசர டுவிட்!!

03 ஏப், 2014 - 17:19 IST
எழுத்தின் அளவு:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், நடிகர்-நடிகைகளை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நடிகை சமந்தாவின் தந்தை ஆந்திராவிலுள்ள ஜெகன்மோகன் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படப்போவதாகவும், அதனால் அக்கட்சிக்காக சமந்தா தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாகவும் ஆந்திராவில் பரபரப்பு செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.


இதையடுத்து ஆந்திராவிலுள்ள மீடியாக்கள் சமந்தாவை அணுகி விவரம் கேட்டபோது, அப்படியா, இந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது. தற்போது ஒரே நேரத்தில் 5 படங்களில் நடித்துக்கொண்டிருககும் எனக்கு ஆந்திராவில் போட்டியிடும் வேட்பாளர்களே யார் யார் என்பது தெரியாது. அந்த அளவுக்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறேன். அப்படியிருக்க நானாவது , கட்சிக்காக பிரசாரம் செய்வதாவது என்று அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டாராம்.


அதையடுத்து சமீபகாலமாக தனக்கு தோன்றும் விசயங்களை தனது டுவிட்டரில் தவறாமல் பதிவு செய்து வரும் சமந்தா, இந்த விசயத்தையும் உடனடியாக பதிவு செய்து தன்னைப்பற்றிய எழுந்துள்ள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம். அதோடு, எனக்கு எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யும் எண்ணமும் இல்லை, எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in