விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
அட்டகத்தி படத்தில் அறிமுகமான தினேசுக்கு குக்கூ படம் புதிய அடையாளத்தைக் கொடுத்து விட்டது. ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர் கமிட்டான படம் வாராயோ வெண்ணிலாவே. அந்த படத்தில் சில நாட்கள் நடித்தவர், குக்கூ கிடைத்ததும் அதை டீலில் விட்டு விட்டாராம். அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் படத்தை முடித்துக்கொடுத்தாராம் தினேஷ். அதோடு, இந்த படத்தின் கதை தன்னை பெரிதாக பாதிக்கவில்லை. அட்டகத்திக்கு பிறகு சரியான படம் கிடைக்காததால் இதை ஏற்றுக்கொண்டேன் என்றும், அந்த படம் பற்றி கூறி வருகிறாராம் தினேஷ். இதனால் மேற்படி படாதிபதி அவர் மீது அதிருப்தியில் உள்ளாராம்.
இந்தநிலையில், வருகிற 5-ம் தேதி மதுரையில், இளையராஜாவின் தலைமையில் அங்குள்ள தமுக்கம் மைதானத்தில் மாபெரும் இசை விழா நடைபெறும்போது அப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் கார்த்திக்ராஜா என்பதால், படத்தின் ஆடியோவை அந்த மேடையிலேயே வெளியிடுகிறார்களாம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தினேஷ் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்கிறார்கள்.