இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
60 வயதை கடந்து விட்ட மலையாள நடிகர் மம்மூட்டி தனது மகன் துல்கர் சல்மானையும் அடுத்த வாரிசாக களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். ஆனபோதும், இப்போதும் சில படங்களில் இளவட்ட கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், சமீபகாலமாக அவர் அப்படி நடிக்கும் படங்களுக்கு கேரள ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைந்து வருகிறது.
அதிலும் சில படங்களில் டீன்ஏஜ் நடிகைகளுடன் அவர் நெருக்கமாக நடித்ததற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தனக்கென ஒரு நல்ல இமேஜ் உருவாகியிருக்கும்போது, இந்த மாதிரி எதிர்ப்புகளுக்கு ஆளாக வேண்டாமென்று இப்போது ரொமான்டிக் கதைகளில் நடிப்பதை தவிர்க்க முடிவெடுத்துள்ளார் மம்மூட்டி.
மேலும், ஏற்கனவே ஒரு வடக்கன் வீரகாதா, பழசிராஜா போன்ற சரித்திர படங்களில் நடித்த மம்மூட்டி, தற்போது கேரளாவில் உள்ள மேலும் சில சரித்திர மன்னர்களின் கதைகளில் நடிப்பதில் தனது ஆர்வத்தை திருப்பியிருக்கிறார். அந்தவகையில் கேரளாவை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான சேரமான் பெருமாள் என்ற சரித்திர நாயகரின் கதையில் அடுத்து நடிக்கப்போகிறாராம் மம்மூட்டி.
இந்த தருணத்தில் சரித்திர படங்கள் என்றால் பிரமாண்ட பட்ஜெட் தேவைப்படுவதால், பழசிராஜாவில் சரத்குமாரையும் நடிக்க வைத்து தமிழ்நாட்டிலும் வெளியிட்டது போன்று, இந்த படத்திலும் ஒரு பிரபல தமிழ் நடிகரை நடிக்க வைத்து தமிழ், மலையாளம் என இரு மொழி படமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளாராம் மம்மூட்டி.