தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு காலத்தில் கவுண்டமணி, கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வடிவேலு, சமீபமாக சந்தானம்... மாதிரி ஒருநாள் கால்ஷீட்டுக்கு 3 லட்சம், 5 லட்சம் என்று சம்பளம் வாங்குமளவிற்கு மளமளவென உயர்ந்து வரும் சூரி., அண்ணே... அண்ணே... என எதிர்படும் தம்பிகளுக்கெல்லாம் கூட அண்ணே... அல்வா கொடுத்தாலும் பண விஷயத்தில் படுகறாராம்... அதற்கு சமீபமாக சொல்லப்படும் சாம்பிள்., இந்த பரோட்டா பார்ட்டிக்கு இதுநாள் வரை அக்கவுண்ட், ஆடிட்டிங் உள்ளிட்ட அக்கவுண்ட் சமாச்சாரங்களை கவனித்து வந்த செல்வம் எனும் நண்பர் ஒருவர்., தம்பி சூரியே பெரிய காமெடி நடிகர் ஆயிட்டாப்பல... நாம் ஒரு படத்தை தயாரித்து தயாரிப்பாளராவது ஆவோம்... என புதுமுகங்களை வைத்து இன்னமும் பெயரிடப்படாத ஒரு படத்தை முக்கால்வாசி எடுத்து விட்டு, சூரியிடம் காமெடி போர்ஷனுக்கு கால்ஷீ்ட் கேட்டு போயிருக்கிறார்.
நாலு நாள் கால்ஷீட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம், ஆக மொத்தம் 20 லட்சம் சம்பளம்... மிச்ச சொச்சம் இல்லாமல் அத்தனையும் அட்வான்ஸாகவே தந்துடணும், அதுக்கு முன்னால நீங்க இதுவரை எடுத்த படத்தை போட்டு காட்டி அது எனக்கு பிடிச்சிருந்தா மட்டுமே.. இந்தநாலு நாள் கால்ஷீட்டும் உண்டு! என ஏகப்பட்ட கண்டீஷன் போட்டது கண்டு... நீயும் வேண்டாம், உன் கால்ஷீட்டும் வேண்டாம் என ஒரே எகிறாக எகிறி வந்துவிட்டாராம் அந்த புது புரொடியூசர்! மார்ச்-ஏப்ரல் மாசம், இன்கம்டாக்ஸ்... பைல் பண்ணும் நேரம்... எல்லாத்திலும் காமெடி! எல்லோருக்கும் சாரி சொல்லாதீங்க சூரி!