இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
லட்சுமிமேனனை கவர்ச்சியாக நடிக்க வைக்ககூட முடியாமல் கோலிவுட்டில் பல இயக்குனர்கள் திணறிக்கொண்டு வந்த நிலையில், நான் சிகப்பு மனிதன் படத்தில் கிளாமர் மட்டுமின்றி லிப் டு லிப் முத்தக்காட்சியிலும் அவரை நடிக்க வைத்து சாதனை செய்து விட்டார் விஷால். அந்த காட்சிதான் படத்தின் கதையையே மாற்றிப் போடுகிறது. அதிலிருந்து படம் படு சூடு பிடித்து விடும் என்று ஏகத்துக்கு பில்டப் கொடுத்து வந்தது விஷால் அன் கோ. ஆனால், படத்தை தணிக்கைக்குழுவுக்கு அனுப்பியபோது, யு சான்றிதழ் வாங்க அந்த உதட்டு முத்தக்காட்சிதான் இப்போது தடையாக இருக்கிறதாம்.
படத்தில் வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இது சாதாரண முத்தமாக இருந்தாலும் போனால் போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் ஹாலிவுட் படங்களில் இடம்பெறுவது போல் செம சூடான காட்சியாக அல்லவா உள்ளது. எப்படி விட முடியும் என்று சென்சார்போர்டு அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்து விட்டார்களாம்.
ஆனால் விஷாலோ விடுவதாக இல்லை. படத்தின் கதைக்கு அவசியம் என்பதால் இந்த காட்சியில் நடிக்க லட்சுமிமேனனை சம்மதிக்க வைக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குதானே தெரியும் என்று சொல்லிக்கொணடு இப்போது படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியிருக்கிறார்.
உதட்டு முத்தக்காட்சி தப்பிக்குமா? இல்லை கத்தரிக்கு இறையாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.