'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
அலெக்ஸ் பாண்டியன், சகுனி, அழகு ராஜா என தொடர் தோல்வி படங்களை கொடுத்த கார்த்தி, பிரியாணி படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் அந்தப்படம் பெரிதாக போகவில்லை, இதனால் அவரது மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது. இருப்பினும் எப்படியாவது அடுத்தப்படத்தை ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தில் சத்தமில்லாமல் நடித்து வருகிறார். இப்படத்திற்கு காளி என்று பெயர் வைத்துள்ளனர். கார்த்தி ஜோடியாக தெலுங்கு நடிகை ஒருவர் நடித்து வருகிறார். வடசென்னையை மையமாக கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் கார்த்தியின் பெயர் காளி என்பதால் அதையே படத்தின் தலைப்பாக்கினர். இதுவரை தமிழ் சினிமாக்களில் சொல்லாத விஷயங்களை இப்படத்தில் சொல்லியிருக்கிறார்களாம். தற்போது படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தற்போது காளி படத்தின் பெயரை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் புதிய பெயர் வெளியாகலாம் என தெரிகிறது.