ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கழுகு கிருஷ்ணா நடித்து வரும் புதியபடம் வானவராயன் வல்லவராயன். ராஜா மோகன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் கிருஷ்ணா ஜோடியாக மோனல் கஜார் நடிக்கிறார். கூடவே இப்படத்தில் கெஸ்ட் ரோலில் சந்தானம் நடிக்க இருக்கிறார். சந்தானம் கெஸ்ட் ரோலில் நடித்தாலும், அவர் வருகின்ற காட்சி ரொம்ப ஹைலைட்டாக இருக்குமாம். மேலும் இப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவமாம். அண்ணன்-தம்பி வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை கதையைத்தான் வானவராயன் வல்லவராயன் படமாக இயக்கி வருகிறார் ராஜா மோகன். பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் இப்படத்தை இயக்கியுள்ளனர். கோடை ஸ்பெஷலாக மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.