பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் வளர்ந்து கொண்டிருந்தபோது அவருக்காக செந்தூரபாண்டி என்ற படத்தில் நடித்த விஜயகாந்த், சூர்யா வளர்ந்து வந்தபோதும் பெரியண்ணா என்ற படத்தில் நடித்தார். அப்போது விஜயகாந்தின் மார்க்கெட் உச்சத்தில் இருந்ததால் அந்த படங்களில் அவர் நடித்தது விஜய், சூர்யாவுக்கு பலமாக அப்படங்கள் அமைந்தன.
இந்நிலையில், சகாப்தம் என்ற படம் மூலம் தனது மகன் சண்முகப்பாண்டியனை அறிமுகம் செய்யவிருக்கும் விஜயகாந்த், தானும் அப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கயிருக்கிறாராம். கடைசியாக 2010ல் விருதகிரி என்ற படத்தை தானே இயக்கி நடித்த விஜயகாந்த், அதன்பிறகு முழுநேர அரசியல்வாதியாகி விட்டதால் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் இது தனது மகன் அறிமுகமாகும் முதல் படம் என்பதால் மகனுக்காக மீண்டும் சினிமா களத்தில் குதிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
இப்படம் காதல் கதையில் தயாரானபோதும், விஜயகாந்த்தும் நடிப்பதால், அவர் தோன்றும் காட்சிகளில் அதிரடியான அரசியல் பஞ்ச் டயலாக்குகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களாம் சகாப்தம் டீம்.