புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
அஜீத் நடித்த, 'தீனா' படத்தில் அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து அவர் நடித்த படங்களில் எத்தனையோ கதாநாயகிகள் நடித்தபோதும் கஜினியில் நடித்த அசின் மீது மட்டும் இன்னமும் உள்ளூர கோபத்திலேயே இருக்கிறார். காரணம், அந்த அளவுக்கு கஜினி படத்தில் நடித்தபோது அவருக்கு டார்ச்சர் கொடுத்தாராம்.
அதே படத்தில் இன்னொரு நாயகியாக நயன்தாராவும் இடம்பெற்றதால் வேண்டுமென்றே படப்பிடிப்புக்கு தாமதாக வருவது, வயிற்று வலி என்று பொய் காரணம் காட்டி லீவு போடுவதுமாக இருந்திருக்கிறார். ஆனபோதும் அதன்பிறகு அவரையே இந்தி கஜினியிலும் நடிக்க வைத்தார் முருகதாஸ். அந்த படம் தான் அசினை பாலிவுட்டில் பிரபலப்படுத்தியது.
இந்தநிலையில், அசினைப்போலவே தற்போது கத்தியில் நடித்து வரும் சமந்தாவும், தான் பிசியாக இருப்பதை காரணம் சொல்லிக்கொண்டு அடிக்கடி படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறாராம. அதேபோல், சில நாட்களில் ஏதாவது காரணம் சொல்லி சீக்கிரமே எஸ்ஸாகி விடுகிறாராம். இதனால் சில நாட்களாக இதை பொறுத்துக்கொண்ட முருகதாஸ், ஒருநாள் டென்சனில் கத்தி விட்டாராம். அதில் ஆடிப்போன சமந்தா, அதிலிருந்து காலை 9 மணி அடித்ததும் முதல் நபராக ஸ்பாட்டில் ஆஜராகி வருகிறாராம் சமந்தா.