'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஷால் - லட்சுமி மேனன் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. பாண்டியநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷால் நடிக்கும் படம் என்பதால், நான் சிகப்பு மனிதன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று நான் சிகப்பு மனிதன் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்த்தனர். அப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சிக்கு தணிக்கைக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனராம். மேலும் படத்தில் இடம்பெறும் விஷால்-லெட்சுமி மேனன் லிப்லாக் முத்தக்காட்சிக்கும் சென்சார் போர்டு ஆட்சபேனம் தெரிவித்துள்ளனர். அதோடு அந்தப் பாடல் காட்சியில் பல இடங்களில் கட் கொடுத்துள்ளனர்.
படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான விஷால், தணிக்கைக்குழுவினர் கட் கொடுத்ததை ஏற்காமல் அவர்களிடம் கடுமையாய் வாக்குவாதம் செய்திருக்கிறார். பேச்சுவார்த்தையின் முடிவில், குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் நான் சிகப்பு மனிதன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படும் என்ற தணிக்கைக்குழு தெரிவித்திருக்கிறது. அவர்கள் குறிப்பட்ட காட்சிகளை கட் பண்ணினால் யுஏ சான்றிதழ் கிடைக்கும். முத்தத்தை நீக்கலமா...? அல்லது நீக்காமல் ஏ சான்று பெற்றுக்கொள்ளலாமா...? என்று முடிவு செய்ய முடியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் விஷால்.