ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாற்றுத்திறனாளிகளின் காதலையும், பிரச்னைகளையும் உணர்வு ரீதியாக எடுக்கப்பட்ட படம்தான் குக்கூ. பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கியுள்ள இப்படம் சிறிய படமாக இருந்தாலும், ரசிகர்களின் பேராதரவினால் தற்போது பெரிய படமாகி விட்டது. அதனால் திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் தற்போது வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாக கூறுகிறார்கள்.
இதுபற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் கூறும்போது, ஒவ்வொரு நாளும் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், குக்கூ படம் திரையிடப்பட்ட 205 தியேட்டர்களில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்கள் மட்டும் 5.7 கோடி வசூலாகியிருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி, இதற்கு முன்பு வெளியான எங்கேயும் எப்போதும், ராஜா ராணி படங்களுக்கு அடுத்த இடத்தை தற்போது குக்கூ பிடித்துள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் கலெக்சன் அதிகரித்துக்கொண்டே வருவதால், பல முந்தைய சாதனைகளை இப்படம் முறியடித்து விடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்கிறார்.