ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே கும்கி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து, இன்று முன்னணி நடிகையாகிவிட்டார் லட்சுமிமேனன். அவருக்கு முன் களவாணி படத்தில் அறிமுகமானபோது ஓவியாவும் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே நடிகையானதாக சொல்லப்பட்டது. இதோ இப்போது..குக்கூ படத்தின் கதாநாயகியான மாளவிகாவும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிதான். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே குக்கூ படத்தில் கமிட்டாகிவிட்டாராம் மாளவிகா.
ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு நடிக்கத் தொடங்கிய மாளவிகா குக்கூ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றதால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்று பயந்துபோனாராம். நல்லவேளையாக, தேர்வு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு முடிவுற்றது மாளவிகாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாம். குக்கூ படம் வெளியான தினத்தில் கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்ததால் சென்னைக்கு வர முடியாமல் போய்விட்டதாம். தேர்வு முடிந்த மறுநாள் சென்னைக்கு வந்திறங்கிய மாளவிகா குக்கூ படத்தின் வெற்றியைக் கேள்விப்பட்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டாராம்.