இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
1991ம் ஆண்டு ஆத்தா உன் கோவிலிலே படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் கஸ்தூரி. அதற்கு பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கஸ்தூரி, திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானர். 6 வருடங்களுக்கு பிறகு சென்னை திரும்பிய கஸ்தூரி மீண்டும் சினிமாவில் அக்கா அண்ணி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். சில படங்களில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். சில கார்பரேட் சினிமா கம்பெனியில் நிர்வாகியாக பணிபுரிந்தார்.
இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு முழுநேர தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆகிவிட்டார். புதுயுகம் தொலைக்காட்சியில் அவர் நடத்தி வரும் வினா விடை வேட்டை பாப்புலரானதைத் தொடர்ந்து, தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்ற முடிவு செய்திருக்கிறார்.
"மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் அறிவாற்றலை பெருக்கும் இந்த நிகழ்ச்சி எனக்கு மனநிறைவையும், சந்தோஷத்தையும் தருகிறது. எதிர்காலத்தின் நம்பிக்கையாக இருக்கும் அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவருவது உற்சாகத்தை தருகிறது. பல கட்டங்களாக நடக்கும் இந்தப் போட்டிக்காக கடுமையாக உழைக்கிறேன்" என்கிறார் கஸ்தூரி.