தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி இந்தி ரீமேக்கிலும் நடித்த அசினுக்கு அதன்பிறகு இந்தியில் மார்க்கெட் சூடு பிடிக்கவே, தென்னிந்திய சினிமாவை மறந்து விட்டு முழுநேர பாலிவுட் நடிகையாகி விட்டார். சில கோலிவுட் டைரக்டர்கள் அழைத்தபோதும் வராதவர், விஜய் நடித்த காவலன் படத்தில் மட்டுமே நடித்தார். அதையடுத்து மறுபடியும் பாலிவுட்டுக்கு ஓட்டம் பிடித்தார்.
ஆனால், தற்போது அவரது இந்தி சினிமா மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதையடுத்து, மீண்டும் தென்னிந்தியாவில் ஆட்டத்தை ஆரம்பிக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார் அசின். இந்த நிலையில், கடல் படத்தையடுத்து தான் இயக்கும் புதிய படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இயக்கவிருக்கும் மணிரத்னம், அசினையும் ஒரு நாயகியாக புக் பண்ணியிருக்கிறார்.
நாகார்ஜூனா, மகேஷ்பாபு ஆகியோர் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக அசினும், மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். இதேபடத்தில் முதலில் ஐஸ்வர்யாராய்தான் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடிக்கயிருந்தார். ஆனால் தற்போதைக்கு நடிப்பதை அவர் தவிர்ப்பதாக சொன்னதையடுத்தே அந்த வாய்ப்பு அசினுக்கு கிடைத்திருக்கிறது.