Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலா பால் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்..!?

19 மார், 2014 - 11:23 IST
எழுத்தின் அளவு:

அமலா பால் ஆட்டம் ஓவராக இருக்கிறது..! என்ற அதிருப்தி குரல்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் வேகமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. மைனா படத்துக்கு முன்புவரை ஒரு துணை நடிகை ரேன்ஜில் இருந்தவர்தான் அமலா பால். மைனாவின் வெற்றி இவரை முன்னணி நடிகையாக்கியது. அதற்குள் பழசை மறந்துவிட்டாரே என்று புலம்புகிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள். அம்மா, அப்பா, தம்பி சகிதமாகத்தான் படப்பிடிப்புக்கு வருகிறாராம் அமலாபால். அவர்களுக்கான ஹோட்டல், விமான டிக்கெட் செலவுகளே ஏகப்பட்ட லட்சங்களை காலி பண்ணிவிடுகிறதாம்.

அதோடு, எனக்கு உள்ளூர் மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர் வேண்டாம். மும்பையிலிருந்துதான் மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர் வர வைக்க வேண்டும் என்று கறாராகச் சொல்கிறாராம். அமலா பால் சொல்கிறபடி மும்பையிலிருந்து மேக்கப்மேன், ஹேர் டிரஸ்ஸரை வர வைத்தால் அவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 25 ஆயிரம் மொய் எழுத வேண்டியிருக்கிறதாம். தவிர, அவர்கள் தங்கும் ஹோட்டல் செலவு வேறு. இந்த வகையில் அமலா பாலினால் ஏகப்பட்ட லட்சங்கள் விரயமாகிறதாம். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கவும் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in