ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பரதேசிக்கு பின், ஒவ்வொரு படத்தையும், கவனமாக தேர்வு செய்து நடிக்கும் அதர்வா, ஈட்டி படத்துக்காக, தடகள விளையாட்டு வீரராக, தன்னை முழுசாக மாற்றிக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தய காட்சிகளை, திரும்பத்திரும்ப படமாக்கியபோது, கால் வலிக்கிறது, கை வலிக்கிறது என்று, டேக்கா கொடுக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் அதர்வா. அதுமட்டுமின்றி, சோகமான ஒரு பாடல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தபோது, நிஜமான உடல் சோர்வை, அந்த பாடலில் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து, அந்த பாடலில் தத்ரூபமாக நடித்துக் கொடுத்துள்ளார் அதர்வா.