மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வித்யாபாலன் நடித்த, கஹானி இந்தி படத்தின் தமிழ் ரீ -மேக்கில் நடித்து வருகிறார், நயன்தாரா. வெயிட்டான ரோல் என்பதால், இந்த படத்துக்காக, ரொம்பவும் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார். ஒரு சண்டை காட்சியில், டூப் வைத்துக் கொள்ளலாம் என்று, டைரக்டர் கூறியபோது,அதெல்லாம் தேவையில்லை. நானே பார்த்துக் கொள்கிறேன் என, வில்லன்களுடன் மோதினாராம் நயன்தாரா.அப்போது, நயனின் கைவிரல்களில், நகங்கள் பெரிதாக வளர்ந்திருந்ததை பார்த்த ஸ்டண்ட் மாஸ்டர், இப்படியே சண்டை காட்சியில் நடித்தால், உங்கள் விரல் நகங்கள், வில்லன்களை குத்தி காயப்படுத்தி விடும் என்றாராம். அதையடுத்து, ஐந்தே நிமிடத்தில், மொத்த நகங்களையும் வெட்டிவிட்டு வந்து, வில்லன்களை பெண்டெடுத்தாராம், நயன்.