தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மிஷ்கின் உதவியார் ஜே.வடிவேல் இயக்கும் படம் கள்ளப்படம். கே இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர், எடிட்டர், கேமராமேன் எல்லோருமே அவரவர் கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு சினிமா எடுக்க முயற்சிக்கிறார்கள். அது வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது கதை. சினிமாவில் முதல் படம் எடுப்பது எத்தனை சிரமம் என்பதை காமெடியா சொல்கிறார்களாம். லட்சுமிப்ரியா என்பவர் ஹீரோயின்.
இந்தப் படத்தின் பாடல்களில் இசை அமைப்பாளர் கே ரொம்பவே மெனக்கெடுகிறார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகளை ஆஸ்திரேலியாவில் செய்ய இருக்கிறார் கே. இதற்காக ஒட்டுமொத்த கள்ளப்படம் டீமும் ஆஸ்திரேலியா செல்கிறது. கதைப்படி சினிமாவில் ஜெயிக்கும் இவர்கள் அடுத்த படத்தை ஆஸ்திரேலியாவில் எடுப்பார்களாம். அதற்கான காட்சிகளையும் அங்கேயே படமாக்கிவிட்டு திரும்ப திட்டமிட்டிருக்கிறார்கள்.