ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மியூசிக் சேனல்களின் அழகான தொகுப்பாளினி கன்னிகா. நேயர்களுடன் இனிக்க இனிக்க பேசி அவர்களுக்கு பிடித்த பாட்டை ஒளிபரப்பிக் கொண்டிருந்த கன்னிகா, இப்போது சினிமா ஹீரோயின் ஆகிவிட்டார். சரத்குமார் நடித்த சத்ரபதி படத்தை இயக்கிய மகேஷ் அடுத்து சரித்திரம் பேசு என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்திற்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக கன்னிகாவின் நிகழ்ச்சியை பார்க்க கன்னிகாவுக்கு சினிமா சான்ஸ் அடிச்சுது. மகேசுக்கு ஹீரோயின் கிடைச்சாச்சு.
"நிறைய பேர் என்னை வட இந்திய பொண்ணுன்னு நினைச்சிட்டிருக்காங்க, நான் பக்கா தமிழ்நாட்டு பொண்ணு. சினிமால நடிக்கிற ஐடியால்லாம் கிடையாது. திடீர்னு சான்ஸ் வந்தப்போ மிஸ் பண்ணிடாதேன்னு பிரண்ட்சுங்க சொன்னாங்க. நடிக்க வந்துட்டேன். நிகழ்ச்சியில் மார்டன் டிரஸ் போட்டு வந்தாலும் எனக்கு பாவாடை தாவணி, சேலைகட்டத்தான் பிடிக்கும். அந்த ஆசையை தீர்க்குற மாதிரி நான் நடிக்கிற படத்துல கிராமத்து பெண் கேரக்டர். தொடர்ந்து கிராமத்து பெண்ணாக நடிக்கவே ஆசைப்படுகிறேன்" என்கிறார் கன்னிகா. மிஸ் தமிழ்நாடு 2013 போட்டியில் கன்னிகா அழகான கூந்தல்காரி என்ற விருதை தட்டிச் சென்றார் என்பது கூடுதல் தகவல்.