ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கின்னஸ் சாதனைக்காக அவ்வப்போது படங்கள் எடுப்பார்கள். ஆனால் அந்த படங்கள் வெறும் சாதனை படங்களாகத்தான் இருக்குமே தவிர மக்கள் ரசிக்க மாட்டார்கள். சமீபத்தில் அகடம் என்ற படம் ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது கின்னஸ் சான்றிதழ் பெற்றது. ஆனால் தியேட்டரில் ஒரு நாள்கூட ஓடவில்லை.
இப்போது 48 மணி நேரத்துக்குள் ஒரு படம் எடுக்க போகிறார்கள். கதை எழுதுவதில் ஆரம்பித்து முழு படமும் 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்டு விடுமாம். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார். கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். கன்னட இயக்குனர் ரஜினீஸ் பவன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் பெங்களூரில் கின்னஸ் ஜூரிகள் முன்னிலையில் நடக்க இருக்கிறது.