இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஐதராபாத் அருகே நடந்த கார் விபத்தில் பாகிஸ்தான் டி.வி நடிகை சனாகான் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பாகிஸ்தானைச்சேர்ந்த டி.வி நடிகை சனாகான். அங்குள்ள பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் பெண்களை குடம் குடமாக கண்ணீர் விட வைத்தவராம். அதனால் இவருக்கு அங்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கிறார்களாம்.
மேலும், கடந்த ஆண்டு பாபர்கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட சனாகான், கணவருடன் ஐதராபாத்தில் இருந்து கராச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது கார் அதிவேகத்தில் சென்றதால் எதிர்பாராதவிதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதாம்.
இதில் நடிகை சனாகான் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாராம். அதையடுத்து, பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது கணவர் பாபர்கானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் சினிமா வட்டாரத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.