மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நிமிர்ந்து நில் படத்திற்கு எழுந்த சிக்கல் தீர்ந்ததையடுத்து, அப்படம் ஒருவழியாக இன்று(மார்ச் 8ம் தேதி) மாலை முதல் ரிலீஸானது. ஆதிபகவன் படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள முக்கியமான படம் நிமிர்ந்து நில். சமுத்திரகனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார். ஜெயம் ரவி இரண்டு விதமான வேடங்களில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார். இப்படம் நேற்று(மார்ச் 7ம் தேதி) வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசனுக்கு ஏற்பட்ட நிதி சிக்கலால் இப்படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வந்த நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்னை தீர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நிமிர்ந்து நில் படம் இன்று மாலை முதல் தமிழகம் முழுக்க ரிலீஸாகியுள்ளது.