ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன் படத்தில் நாக்குமுக்க பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் கலக்கிய அவர், விஜய் நடித்த வேட்டைக்காரன் வரை பல படங்களில மெகா ஹிட் பாடல்களை கொடுத்து வந்தார். ஆனால், திடீரென்று அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த நடிகன் விழித்தெழுந்ததால் , நான் என்ற படத்தில் நாயகனாக அவதாரமெடுத்தார். அந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும், விஜய்ஆண்டனிக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக்கொடுத்தது. விளைவு, அதன்பிறகு நடிப்பு மீது அவருக்கான ஆர்வம் இன்னும் அதிகமானது.
அதனால், படங்களுககு இசையமைப்பதை குறைத்து விட்டு நடிப்புக்கு கூடுதல் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சலீம் என்றொரு படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி. அடுத்தடுத்து திருடன், சைத்தான், இந்தியா பாகிஸ்தான் பார்டர் என மூன்று படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டு வைத்துள்ளார். இந்த 3 படங்களையும் அவரே தயாரிக்கிறாராம். இதன் பிறகு தனது ஹீரோ இமேஜ் எக்குத்தப்பாக எகிறும் என்றும் எதிர்பார்க்கிறார் விஜய் ஆண்டனி.