ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபுதேவா நடித்த விஐபி படத்தில் தமிழுக்கு வந்தவர் சிம்ரன். அதையடுத்து வேகமாக வளர்ந்தவர், கமல் நடித்த பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களிலும் நடித்தார். அதன்பிறகு கமலுடன் அவர் எந்த படத்திலும் இணையவில்லை. ஆனால், கடந்த சில தினங்களாக தமிழில் தயாராகும் த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் பரவி கிடக்கிறது. ஆனால், இதனை சிம்ரன் மறுத்துள்ளார்.
இதுபற்றி சிம்ரன் விடுத்துள்ள செய்தியில், தமிழில் நானி, வாணிகபூர் நடித்த ஆஹா கல்யாணம் படத்தில்தான் கடைசியாக நடித்தேன். அதன்பிறகு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. அதோடு, எதிர்காலத்தில் படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால் அது சம்பந்தமான வேலைகள்தான் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நான் கமல் சார் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியிருப்பது உண்மையல்ல. கமலுடன் மீண்டும் நடிக்க சான்ஸ் கிடைத்தால் சந்தோசமே. ஆனால், இதுவரை அவருடன் நடிப்பது சம்பந்தமாக யாரும் என்னை அணுகவில்லை. அப்படி என்னை நடிக்க அழைத்தால் கண்டிப்பாக அந்த தகவலை மீடியாக்களுக்கு அறிவிப்பேன் என்கிறார் சிம்ரன்.