Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடன் பாக்கி - ஜெயம் ரவியின், நிமர்ந்து நில் இன்று ரிலீசாகவில்லை!

07 மார், 2014 - 10:18 IST
எழுத்தின் அளவு:

ஆதிபகவன் படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் முக்கியமான படம் ''நிமிர்ந்து நில்''. சமுத்திரகனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் இப்படம் எங்களது சினிமா கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று ஜெயம் ரவி, அமலாபால், சமுத்திர கனி உள்ளிட்ட ஒவ்வொருவரும் தனித்தனியாக பேட்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே நிதி சிக்கலில் தவித்து வந்த நிமிர்ந்து நில் படம் ஒருவழியாக இன்று(மார்ச் 7ம் தேதி) ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில கடன் சிக்கல்களால் இப்படம் இன்று ரிலீஸாகவில்லை.

இதுப்பற்றி விசாரித்ததில், நிமிர்ந்து நில் படத்தை தயாரித்துள்ள வாசனன் விஸ்வல் வென்சர்ஸ் தயாரிப்பாளரான கே.எஸ்.சீனிவாசன் ஏற்கனவே தான் தயாரித்த சில படங்களுக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை கடன் பாக்கி வைத்திருக்கிறார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் தயாரிப்பாளர்களிடம் சென்று எங்களுக்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய கடனை கொடுத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் சீனிவாசனால் பணத்தை கொடுக்க முடியவில்லை. மேலும் இதுதொடர்பாக படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, இயக்குநர் சமுத்திரகனி ஆகியோரிடமும் முறையிட்டுள்ளது. ஜெயம் ரவியோ, ஏற்கனவே நான் இந்தப்படத்திற்காக ரூ.90 லட்சம் விட்டுக்கொடுத்துள்ளேன் என்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அதேப்போல் சமுத்திரகனியும், நானும் சுமார் ரூ.50 லட்சம் விட்டுக் கொடுத்துள்ளேன் என்று கைவிரித்துவிட்டார். சீனிவாசன், கடனை திருப்பி செலுத்ததால் இன்று வெளியாக இருந்த நிமிர்ந்து நில் படம் ரிலீஸாகவில்லை.

அதேசமயம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் சுமூகமான தீர்வு ஏற்படும் பட்சத்தில், படம் நாளை ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in