ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஸ்வரூபம் பட வேலைகளை முடித்து விட்ட கமல், அடுத்து நடிக்கும், உத்தம வில்லன் பட வேலைகளில் இறங்கிவிட்டார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதையை கமலே எழுதுகிறார். இதில்,கமலுடன் நடிக்கும்,நடிகர்- நடிகையர் பட்டியல், சஸ்பென்சாக வைக்கப் பட்டுள்ளது. மேலும், படத்தில் கமல் எந்த மாதிரியான வேடத்தில் தோன்றுகிறார் என்பதை, படத்தின் முதல் போஸ்டர் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளனர். அதில், கூத்துக் கலைஞர்களின் முக ஒப்பனையை நினைவுபடுத்தும் வகையில், கமலின் தோற்றத்தை வெளியிட்டு இருப்பவர்கள், டைட்டிலில் வில்லுப்பாட்டு இசைகலைஞர்கள் பயன்படுத்தும், வில் இசைக் கருவியின் சாயலில் எழுத்து களை வடிவமைத்துள்ளனர். இந்த படம், சரித்திர கால கதை பின்னணியில் உருவாகிறது.