Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகளை அடிக்கும் பழக்கத்தை கைவிட்ட டைரக்டர் சாமி!

06 மார், 2014 - 15:07 IST
எழுத்தின் அளவு:

உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. இதில் உயிர் படத்தில் சங்கீதாவை ஆபாச அண்ணியாக சித்தரித்தவர், அதற்கடுத்து மிருகம் படத்தை இயக்கியபோது படப்பிடிப்புக்கு சரியானபடி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பத்மப்பிரியாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து பெரும் சர்ச்சையை உருவாக்கினார். இதனால் பின்னர் சாமி படம் இயக்குவதற்கு தடை விதித்து ரெட் கார்டு போடப்பட்டது.

அப்படி போடப்பட்ட தடை பின்னர் 6 மாதமாக்கப்பட்டதையடுத்து, சிந்து சமவெளி படத்தை எடுத்தார். அதுவும் வழக்கம்போல் காம நெடி கொண்ட படம்தான். மாமனார்-மருமகளின் லீலைகளை படமாக்கியிருந்தார். இதனால் மாதர் சங்கங்கள் கொதித்தெழுந்தன. அவரது வீடு, கார் தாக்கப்பட்டது. அதனால், இப்போது அந்த ஆபாச முத்திரையிலிருந்து விடுபடும் முயற்சியாக கங்காரு என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார் சாமி.

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இந்த கங்காருவில் அகடம் படத்தில் நடித்த பிரியங்கா நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் பற்றி அவர் கூறுகையில், பாசமலர் படத்தில் சாவித்ரி நடித்தது போன்று பாசக்கார தங்கையாக நான் இப்படத்தில் நடித்துள்ளேன். அதனால் நவீன சாவித்ரியாக ரசிகர்கள் என்னை கொண்டாடினாலும் ஆச்சர்யப்படவதற்கில்லை என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் பிரியங்கா.

அவரிடத்தில் டைரக்டர் சாமி, ஸ்பாட்டில் ரொம்ப அடிக்கடி டென்சனாவார். சில சமயங்களில் கதாநாயகிகள் மீது கைவரிசையையும் காட்டி விடுவாரே. உங்கள் விசயத்தில் எப்படி நடந்து கொண்டார்? என்று கேட்டபோது, எனக்குள்ளும் அபப்டியொரு பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவர் என்னிடம் ரொம்ப அன்பாக பழகினார். என்னை தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார். அதனால், ஹீரோயினிகளை அடிக்கும் பழக்கத்தை அவர் விட்டு விட்டதாகவே தெரிகிறது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in