டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
லட்சுமிமேனன் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். வணிகவியல் சப்ஜெக்ட் எடுத்திருக்கிறார். பிளஸ் 1 ஆண்டு இறுதி தேர்வுகள் தொடங்கியுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை தவிர்த்து விட்டு பத்து நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். தற்போது ஆங்கில தேர்வை எழுதியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது: எங்க பள்ளி ரொம்ப கண்டிப்பானது. நான் நிறைய நாள் லீவு போட்டதை அனுமதிச்சிருக்காங்க. அவுங்க போட்டிருக்கிற ஒரே கண்டிஷன் தேர்வில் நல்ல மார்க் எடுக்கணுங்றதுதான். அதுக்காக ஷூட்டிங் நேரத்துல கூட கேரவன்ல உட்கார்ந்து படிச்சேன். இன்னிக்கு ஆங்கில தேர்வு நல்லா எழுதியிருக்கேன். அடுத்து இன்னும் 5 எக்ஸாம் இருக்கு. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் லீவு இருக்கு. அந்த லீவுல தேர்வுக்கு தயாராகிடுவேன். இந்த வருஷம் பிளஸ்1 தான் சமாளிச்சுடுவேன். அடுத்த வருஷம் பிளஸ் 2 படம் எதுவும் ஒத்துக்காம 6 மாசம் படிப்புக்கு ஒதுக்கிடுவேன். இப்பவும் சொல்றேன், எனக்கு நடிப்பை விட படிப்புதான் ரொம்ப முக்கியம் என்றார்.