Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் திரிந்த தமிழ் நடிகை

27 பிப், 2014 - 16:25 IST
எழுத்தின் அளவு:

தமிழில் கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ படத்தில் நடித்து வருபவர் ராகுல் ப்ரீத்தி சிங். புத்தகம், தடையறத் தாக்க படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார். தெலுங்கில் பிசியான நடிகை. ராகுல் ப்ரீத்தி சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் திரிந்த சம்பவம் இப்போது வெளியாகி இருக்கிறது.

ஐதராபாத் செல்வதற்காக டில்லி விமான நிலையம் வந்த அவரது கை பையில் சில துப்பாக்கி குண்டுகள் இருப்பதை விமான நிலைய ஸ்கேனர் கருவி காட்டிக் கொடுத்தது. உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ப்ரீத்தியை தனியா அழைத்துச் சென்று விசாரித்தனர்.
தன் கை பையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை பார்த்து அவரும் அதிர்ச்சி அடைந்தார். ப்ரீத்தியின் தந்தை ராணுவ அதிகாரி. துப்பாக்கி வைத்திருப்பவர். விசாரணையில் அது அவரது துப்பாக்கி குண்டும் இல்லை என்று தெரிந்தது. உடனடியாக துப்பாக்கி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பரிசோதித்து இது சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி குண்டு என்று அறிவித்தனர்.

அப்போதுதான் என்னமோ ஏதோ படத்தில் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு ஆடியதாகவும் அதில் உள்ள குண்டுகள் எப்படியோ கைப் பைக்குள் விழுந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அது தொடர்பாக விசாரித்து அது உண்மை என்று அறிந்த கொண்ட அதிகாரிகள். ப்ரீத்தி சிங்கை எச்சரித்து அனுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: "விமான நிலையத்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனையை அனுபவதித்தேன். நான் ஒரு தீவிரவாதி போல பார்க்கப்பட்டேன். நான் நடிகை என்பதை எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. 8 மாதத்திற்கு முன்பு படப்பிடிப்பில் என் பைக்குள் வந்து விழுந்த சிறு டம்பி துப்பாக்கி குண்டை நான் கவனிக்கவில்லை. ஒரு சிறு கவனக்குறைவுக்காக பெரிய தண்டனையை அனுபவித்து விட்டேன்" என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in